முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

குழந்தையின் தலையை, நாய் கவ்விச்சென்ற விவகாரம்: 2 தனிப்படைகள் அமைப்பு

மதுரையில் பச்சிளங் குழந்தையின் தலையை, நாய் கவ்விச்சென்ற சம்பவத்தில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, உடலை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

மதுரை பீ.பீ.குளம் வருமானவரித்துறை அலுவலகம் எதிரில் உள்ள இந்தியன் வங்கி
கிளையில் பணம் எடுப்பதற்காக, செல்லூர் பகுதியை சேர்ந்த அய்யனார் என்ற இளைஞர்
சென்றுள்ளார். அப்போது அவ்வழியே சென்ற நாய் ஒன்று பச்சிளங்குழந்தையின் தலையை
கவ்விச் சென்றதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். அங்கு வந்த தல்லாகுளம்
போலீசார் குழந்தையின் தலையை மீட்டனர். மீட்கப்பட்ட குழந்தையின் தலை மதுரை அரசு
ராஜாஜி மருத்துவமனையில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2 தனிப்படை கள் அமைக்கப்பட்டு குழந்தையின் உடலை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, மதுரை அரசு ராஜாஜி
மருத்துவ மனை மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த ஒரு வாரத்தில்
பிறந்த குழந்தைகளின் பட்டியலை தனிப்படையினர் சேகரித்து வருகின்றனர். மேலும்
மாநகராட்சி துப்பரவு பணியாளர்கள் துணையுடன் குப்பைத் தொட்டிகள், கால்வாய்களில்
குழந்தையின் உடல் பகுதியை தேடும் பணியும் தீவிரப்பட்டு உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நரபலிக்காக குழந்தை கொலை செய்யப்பட்டதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை
நடத்தி வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

CAA எதிர்ப்பு வழக்குகள் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பிற்கு ராமதாஸ் வரவேற்பு!

Jeba Arul Robinson

இந்த ஆண்டின் உலக அழகி யார்?

தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் – மகேந்திரன் வாக்குறுதி

Gayathri Venkatesan