பிரபல நடிகை அனுஸ்ரீ போதைப்பொருட்களை பயன்படுத்தினார் என்று போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
இவர் கன்னட திரையுலகில் நடன இயக்குனராக பணியாற்றி வரும் கிஷோன் அமன் ஷெட்டியும் அவர் நண்பர் தருண் ராஜ் என்பவரும் போதைப் பொருள் வழக்கில் கடந்த 2020-ம் ஆண்டு மங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் கன்னட நடிகையும், டி.வி.தொகுப்பாளினியுமான அனுஸ்ரீயும் போதைப் பொருட்கள் பயன்படுத்தியதாகக் கூறப்பட்டது. போலீஸ் விசாரணையில் தான் போதைப் பொருட்களை பயன்படுத்தவில்லை என்றும் மறுத்திருந்தார். இதற்கிடையே போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், நடிகை அனுஸ்ரீயும் போதைப் பொருள் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிஷோர் அமன், தருண் ராஜிடம் நடத்திய விசாரணையில், கடந்த 2008-ம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் நடிகை அனுஸ்ரீ அவர் போதைப்பொருட்களை பயன்படுத்தினார் என்றும், அவருக்கு போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்களுடன் தொடர்பு இருப்பதாகவும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவித்துள் ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ள நிலையில் நடிகை அனுஸ்ரீ மீதான இந்த புகார் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.








