அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது ஏன்?

ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதாலேயே டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக தேர்வுக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17-ம் தேதி முதல்…

ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதாலேயே டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக தேர்வுக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17-ம் தேதி
முதல் நவம்பர் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணியை பிசிசிஐ
நேற்று அறிவித்தது. இதில் சுழல் பந்துவீச்சாளரான அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்
பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டதால் டி20 உலகக்கோப்பை
தொடருக்கான அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய அணி தேர்வுக் குழு தலைவர் சேத்தன் சர்மா தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அஸ்வின் தனது சமூக வலைதளத்தில் டச்சிங் பதிவு ஒன்றை வெளியிட்டுள் ளார். அதில், மகிழ்ச்சியும் நன்றியும் இப்போது என்னை வரையறுக்கிறது என்று கூறியுள்ள அவர், ஒவ்வொரு சுரங்கத்தின் முடிவிலும் வெளிச்சம் இருக்கிறது. ஆனால், சுரங்கத்தில் இருக்கும், வெளிச்சத்தை நம்புவர்களால் மட்டுமே அதைப் பார்க்க முடியும் என்று தன் வீட்டில் எழுதி வைத்திருப்பதை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

தற்போது இங்கிலாந்தில் இருக்கிறார் அஸ்வின். 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்
நான்கு போட்டிகளில் ஆடும் லெவனில் அவர் இடம்பெறவில்லை. அதனால் கடைசி டெஸ்ட் போட்டியில் அவர் சேர்க்கப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.