வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் உள்ள கலை அரங்கத்தில் நேற்று இரவு நடைபெற்ற திருப்பலி தொடக்கத்தில் பாஸ்கா திருவிழிப்பு சடங்கு நடந்தது. ஏசு உயிர்த்தெழுவதை உணர்த்தும் வகையில் பாஸ்காஒளியை பேராலய அதிபர் இருதயராஜ் ஏற்றி வைத்தார். இதில், தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரகணக்கானோர் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இரவு 12 மணி அளவில் வாணவேடிக்கை, மின்னொளி அலங்காரத்துடன் பேராலய கலையரங்கத்தின் மேற்கூரையில் ஏசு கிறிஸ்து உயிர்த்தெழும் காட்சி தத்ரூபமாக நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது. பின்னர் பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
அண்மைச் செய்தி: 16 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி
இதேபோல, மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள தேவலாயத்தில் ஈஸ்டர் தினத்தையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல கேரள மாநிலம், கொச்சியில் உள்ள தேவாலயத்தில் ஈஸ்டர் தினத்தையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இந்த சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








