சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாள்; மலர்தூவி முதலமைச்சர் மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். ஆங்கிலேயரை துணிச்சலுடன் எதிர்த்துப் போரிட்ட சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின்…

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

ஆங்கிலேயரை துணிச்சலுடன் எதிர்த்துப் போரிட்ட சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 266-வது பிறந்தநாள் தமிழ்நாடு அரசு சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, ராஜகண்ணப்பன் உள்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனிடையே அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் சென்னை கிண்டியில் தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளும் தீரன் சின்னமலையின் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினர்.

அண்மைச் செய்தி: 150 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடைபெற்றதால் பக்தர்கள் மகிழ்ச்சி

சேலம் மாவட்டம் சங்ககிரியிலுள்ள தீரன் சின்னமலை நினைவு மணிமண்டபத்தில் அவரது பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் தங்கமணி, சட்டமன்ற உறுப்பினர் சுந்தரராஜன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டு தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.