இயேசுபிரான் உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் தினம் இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துவர்களால் கொண்டாடப்படுகிறது.
உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஈஸ்டர் திருநாளும் ஒன்று. இந்த திருநாளுக்காக கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலம் மேற்கொள்வார்கள். மக்களுக்காக உயிர்விட்ட இயேசுவின் உயிர்த்தெழுதலை ஈஸ்டர் தினமாக கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள தேவலாயத்தில் ஈஸ்டர் தினத்தையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல கேரள மாநிலம், கொச்சியில் உள்ள தேவாலயத்தில் ஈஸ்டர் தினத்தையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இந்த சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
சென்னையில், உள்ள அனைத்து தேவலாயத்திலும் சிறப்பு பிராத்தனைகளுக்காக மக்கள் குவிந்தனர். இதனால் அதிகாலை முதலே, தங்கள் இல்லங்களில் இருந்து தயார் ஆன கிறிஸ்துவர்கள், தங்களின் வேண்டுதலை மேற்கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








