உலக புகழ்பெற்ற உத்திரகோசமங்கை திருக்கோயிலில் 150 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடைபெற்றதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், உத்திரகோசமங்கை பகுதியில் அமைந்துள்ள திருஉத்திரகோசமங்கை கோயிலில் உள்ள மரகத நடராஜர் சிலை ஒரே கல்லில் ஆனது. உலகப் புகழ்பெற்ற இந்த கோயிலில் கடந்த 150 ஆண்டுகளால் தேர் இல்லாததால் தேரோட்டம் நடைபெறமால் இருந்தது. இந்நிலையில், புதிதாக வடிவமைக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய மங்களநாயகி மற்றும் மங்களநாதர் நான்கு ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
அண்மைச் செய்தி: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை
இந்த தேரோட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், 300க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் மற்றும் சித்தர்களும் தேரோட்டத்தில் கலந்துகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இதேபோல, தமிழ்நாடு முழுவதும் பலவேறு இடங்களில் தேரோட்டம் நடைபெற்றதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா சூழ்நிலை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது விழாக்களுக்கு அனுமதி வழங்கி இருப்பது மகிழ்ச்சி தருவதாக தெரிவிக்கின்றனர் விழா ஏற்பாட்டாளர்கள்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








