திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னை தீவுத் திடலில் சீனிவாச திருக்கல்யாண வைபவ உற்சவம் 14 ஆண்டுகளுக்கு பிறகு வெகுசிறப்பாக நடைபெற்றது.
சென்னை தீவுத்திடலில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சீனிவாச திருமண வைபவ உற்சவம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து திருமலை திருப்பதி கோயில் போன்றே திருக்கல்யாண மேடை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து நடைபெற்ற ஸ்ரீனிவாச திருக்கல்யாண வைபவம் உற்சவ விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
அண்மைச் செய்தி: ‘16 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி’
விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான பிரசாதமான லட்டு, விபூதி உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கடந்த 2008-ஆம் ஆண்டு சீனிவாச திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது 14 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. சீனிவாச திருக்கல்யாண வைபவ உற்சவம் குறித்து பக்தர்கள் தெரிவிக்கையில், 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வைபவம் நடைபெறுவது மகிழ்ச்சி தருவதாக தெரிவித்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








