விமரிசையாக நடைபெற்ற மதுரை ஆஞ்சநேயர் திருக்கோயிலின் லட்சுமி குபேர சிறப்பு பூஜை!

மதுரை அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயிலில் லட்சுமி குபேர சிறப்பு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்ற நிலையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மதுரை கிருஷ்ணராயர் தெப்பக்குளம் தெருவில் அமைந்துள்ளதும், மதுரை அருள்மிகு…

மதுரை அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயிலில் லட்சுமி குபேர சிறப்பு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்ற நிலையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

மதுரை கிருஷ்ணராயர் தெப்பக்குளம் தெருவில் அமைந்துள்ளதும், மதுரை அருள்மிகு மதனகோபால சுவாமி திருக்கோவிலின் உபகோயிலுமான அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயிலில் லட்சுமி குபேரருக்கு சிறப்பு பூஜை வெகு விமர்சையாக
நடத்தப்பட்டது.

இதனை முன்னிட்டு அஷ்ட லட்சுமி மற்றும் லட்சுமி குபேரருக்கு ஸ்ரீ சூக்தஹோமமும், அஷ்டலட்சுமி தாயாருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து காலை முதல் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு, அஷ்டலட்சுமிக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு சுவாமிக்கு சொர்ண அபிஷேகம் செய்த ஒரு ரூபாய் நாணயம் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

இப்பூஜையை முன்னிட்டு பக்தர்கள் அரிசி மாவு, மஞ்சள் பொடி, பால், தயிர், குங்குமம், இளநீர், பன்னீர், சந்தானம், திருமஞ்சன பொடி, பச்சரிசி, போன்றவற்றை கோவிலுக்கு வழங்கி அஷ்டலட்சுமி தாயார் மற்றும் லட்சுமி குபேரரின் அருள் பெற்றனர்.  மேலும் மஹாலஷ்மி தாயாருக்கு மருதாணியும், நெல்லிகணி மாலையும் சாற்றினால் திருமணம், குழந்தை பாக்கியம் கை கூடும் என்பது ஐதீகமாக கருதப்படுகிறது. இப்பூஜையில்  மதுரையின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

—ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.