“முதலமைச்சர் கொண்டு வந்த அரசினர் தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்” – சபாநாயகர்!

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் கொண்டு வந்த அரசினர் தனித் தீர்மானம் நிறைவேறியது.

சட்டசபையில் இன்று காவல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது.. இந்த நிலையில் சென்னை நீதிமன்றத்தில் தமிழை முதன்மை நீதிமன்ற மொழியாக ஆக்க வேண்டும் என சட்டமன்றத்தில் அரசினர் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களின் விவாதம் நடைபெற்றது.

திமுக சார்பில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில் :

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் தான் வழங்கினார். 2006 ஆண்டு தமிழ் வழக்காடு மொழியாக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கொண்டுவர வேண்டும் என்று சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தும். அது ஆளுநர் வழியாக உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது. அப்போது இன்னும் சட்ட ஆவணங்கள் தமிழில் கொடுக்கப்படவில்லை என உச்சநீதிமன்றம் குழுவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தடுக்கப்பட்டது. தமிழ் ஆட்சி மொழியாக வருவதை நிச்சயமாக முடியாது என்று மறுக்கவில்லை தரவுகள் தந்தால் அதற்கான வழி வகுக்கப்படும் என்று கூறினார்கள்.

உச்சநீதிமன்ற நீதிபதி பிவி ரமணா முன்னிலையில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் வழக்காடு மொழியாக வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். உச்சநீதிமன்ற கிளைையினை தென் மாநிலங்களில் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். பாரத பிரதமருக்கு கடிதம் எழுதுவது மட்டும் இன்றி நேரடியாக அவரிடம் வலியுறுத்தினோம்.

சபாநாயகர் :

இந்த தீர்மானத்தில் வரலாறு அனைத்தும் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ரகுபதி :

பிரதமரிடமும் உச்சநீதிமன்றத்திலும் நாங்கள் எடுத்த முயற்சிகள் இந்த தீர்மானத்தில் இல்லை. ஆகையால் அதனைப் பதிவு செய்கிறேன். 2006 இதற்காக நடவடிக்கை எடுத்துள்ளோம், முதலமைச்சர் கொண்டு வந்த இந்த தீர்மானத்தை நாங்கள் வரவேற்கிறோம். இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக இந்த தீர்மானத்தை நிறைவேற்றுகிறோம்.

சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் :

முன்னாள் அமைச்சர் சொன்னதற்கு மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. அவர்கள் ஆங்கிலம் வழக்காடும் மொழியாகவும் அதற்கு முன்பு தமிழை கொண்டு வர வேண்டும் என்று தான் கோரிக்கை வைத்திருந்தார்கள். இதுதான் முதல் முறை தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும் என்று தீர்மானத்தை அரசு முன்மொழிந்த உள்ளது. அவர் அதிக வரலாறு சொன்னார் கோரிக்கை வைப்பது எல்லாம் வரலாறு இல்லை , யார் செயல்படுவதில் கொண்டு வருகிறார்களோ அதுதான் வரலாறு. யாரிடமும் கோரிக்கை இல்ல தமிழக மக்களின் ஒட்டுமொத்தமான கோரிக்கை.

(அவையில் திமுகவினர் அமலில் ஈடுபட்டனர்)

முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி:

முதலமைச்சர் உரையில் சில சொற்றொடர் ஆங்கிலத்தில், தமிழிலும் உள்ளது. வழக்காடு மொழியாக கொண்டுவரப்பட வேண்டும் என்று சொன்னாலே நீதிமன்றத்தில் தமிழ் தான் வழக்காடு மொழியாக கொண்டுவரப்படும். அதை தான் நாங்கள் 2006 இல் கொண்டு வந்தோம், ஆங்கிலம் தமிழும் சேர்ந்து தான் இருக்கும் தமிழ் மட்டும் இருக்காது, நமக்கு வேண்டியது நம் உரிமை தமிழில் நீதிமன்றத்தில் பேச வேண்டும். தீர்ப்பு தமிழில் வரவேண்டும் என்று தெரிவித்தார்.

அதிமுக சார்பில் தளவாய் சுந்திரம் :

தமிழ்நாட்டு வழக்கறிஞர்கள் மற்றும் இல்லாமல் ஏழை எளிய மக்களின் நலன் கருதி, அதிமுக சார்பாகவும் இதனை தொடர்ந்து வலியுறுத்தி, முதலமைச்சர் கொண்டுவந்துள்ள தனி தீர்மானத்தை அதிமுக சார்பில் வரவேற்கிறேன்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2012 ஏப்ரல் மாதத்தில் தொடர்பாக தீர்மானம் கொண்டு வந்துள்ளார். உயர் நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புகள் வழிமுறைகள் அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும். மாநில ஆளுநர் வழியாக அனுப்பப்படும் தீர்மானங்களை மத்திய அரசு உடனடியாக செவி சாய்த்து இதற்கு உரிய தீர்வு காண வேண்டும். நீதிமன்றத்தில் படிக்கத் தெரியாதவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் தமிழ் மொழி இருக்கும். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருக்கும் பொழுது இத்தொடர்பாக பிரதமரிடம் மனு அளிக்கப்பட்டது, தீர்மானம் வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய, முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம்:

முதலமைச்சர் கொண்டுவந்துள்ள இந்த தீர்மானத்தை முழு மனதோடு வரவேற்கிறோம். பல ஆண்டுகால கோரிக்கை, மெட்ராஸ் மும்பை கொல்கத்தா மூன்று உயர்நீதிமன்றம் இயங்கி வருகிறது. தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தாலும் தற்போது வரை மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்று தான் அழைக்கப்பட்டு வருகிறது இதனை மாற்ற வேண்டும். மெட்ராஸ் என்ற பெயரை சென்னை உயர்நீதிமன்றம் என்றும் மாற்ற வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியதாகவும், கொல்கத்தா உயர் நீதிமன்றமும் பெயர் மாற்ற வேண்டும் என்று அவர்களும் கோரிக்கை மனு அளித்திருந்தார்கள் அதனை ஏற்று அன்றைக்கு மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வந்தார்கள். அந்த திருத்தம் கொண்டு வரும்பொழுது கொல்கத்தா அரசு மீண்டும் புதிய பெயர் வைப்பதாக கூறினார்கள். அந்த சட்டம் முன் வடிவு திரும்ப பெறப்பட்டது.

தமிழ்நாடு உயர் நீதிமன்றம் எனப் பெயர் வைக்க வேண்டும் தமிழை வழக்காடும் மொழியாக அறிவிக்க வேண்டும் என பிரதமரை சந்தித்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியதாக, ஜென்சி தலைமுறைக்கு மெட்ராஸ் என்று பெயர் தெரியாது, தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் அந்த பெருமை உங்களுக்கு சேர வேண்டும் அதற்கான முயற்சிகளை நீங்கள் முன்னெடுக்க வேண்டும்.

பாகுபாடு உள்ளது வடக்கு தெற்கு , வடமாநிலையில் இருக்கக்கூடிய ராஜஸ்தான் உத்திர பிரதேசம் மத்திய பிரதேசம் இந்த மாநிலங்களில் இது இருக்கின்ற மொழிகளை ஹிந்தி மொழி அலுவல் மொழியாக அறிவித்துள்ளார்கள். இங்கு இருக்கின்ற உயர்நீதிமன்றம் தமிழை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. முதலமைச்சர் பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும். இந்த தீர்மானத்தை வரவேற்கிறேன் என்று தெரிவித்தார்..

பாமக சௌமியா அன்புமணி :

பழமையான நெல் பயிர்களை குறிப்பிட்டு அவர் பேசியுள்ளார், ஆட்சி மொழியாக மட்டுமில்லாமல் பேச்சு மொழியாக தமிழ் நிலைத்திருக்க வேண்டும், முதலமைச்சர் கொண்டு வந்துள்ள இந்த தீர்மானத்தை பாமக வரவேற்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதலமைச்சருக்கு கலைஞர் தமிழ் மொழியை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று தீர்மானத்தை கொண்டு வந்தவர் அதற்கு அழுத்தம் கொடுத்தவர் மருத்துவர் ராமதாஸ்.

தமிழர் அல்லாத உயர்நீதிமன்ற நீதிபதிக்கு சிரமமாக இருக்கும், சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மொழியினை வழக்காடு முடியாத அறிவிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. பயன்படுத்தி ராஜஸ்தான் மத்திய பிரதேசம் பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் வழக்காடு மொழியாக இந்தி மொழியை அறிவித்துள்ளார்கள்.

Al தொழில்நுட்ப வசதியில் மொழிபெயர்த்தாலும் பல்வேறு சிக்கல் உள்ளது அதனால் தமிழர் அல்லாத நீதிபதிகளுக்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது. பிரதமர் ரஞ்சன் கோகாய் தீபக் மிஸ்ரா உள்ளிட்டவருக்கு இந்த தீர்மானத்தை அனுப்ப வேண்டும்.

உலகில் அதிகப் பேசக்கூடிய 25 மொழிகளில் தமிழ் மொழி இடம் பெற்றுள்ளது. தமிழ்நாடு அரசு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ் தமிழ் என்று இடம்பெறவில்லை , ஆங்கில மொழிப்பாடம் என்றுதான் உள்ளது அது மாபெரும் குறை, முதலமைச்சர் கொண்டுவந்துள்ள இந்த தீர்மானத்திற்கு பாமக முழு மனதோடு ஆதரவு தெரிவிக்கிறேன் என்றார்.

பின்னர் பேசிய, பாஜக சட்டமன்ற உறுப்பினர் போஜராஜன்:

இந்த தீர்மானம் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒன்று, இந்தியாவின் பெருமை வேற்றுமையில் ஒற்றுமை, அன்றைய காலகட்டத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஐநா சபையில் சென்று பாரதியாரின் பாடலை குறிப்பிட்டு பேசி உள்ளார். பிரதமர் வெளிநாடுகளுக்கு சென்று திருக்குறளை மொழிபெயர்த்து அங்கு பரிசளிக்கிறார், தமிழ் மொழி மீது பற்று கொண்ட மத்திய அரசுதான் தற்போது உள்ளது. 2016 உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை என்றால் அந்த காலம் தட்ட வேறு தற்போது இருக்கும் காலகட்டம் வேறு. பாஜக சார்பில் முதலமைச்சருக்கு கொண்டுவந்துள்ள தீர்மான வரவேற்கிறேன் என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.