“கடந்த ஆட்சியில் சில வழக்குகளில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படவில்லை – ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு!

கடந்த ஆட்சியில் மூன்று ஆண்டுகளிலும் கொலைக் குற்றங்களின் எண்ணிக்கை ஒரே அளவில் வெளிப்படைதன்மை இல்லாமல் இருக்கிறது என்று ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, சட்டம்-ஒழுங்கு தொடர்பாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “சட்டம்-ஒழுங்கு என்றால் படிப்படியாக கொலை உள்ளிட்ட குற்றங்கள் குறைய வேண்டும். கொலை செய்வதற்கு முன்பு திட்டமிடுவதும், பின்னர் அதை மறைப்பதற்கான முயற்சிகளும் நடைபெறும். ஆனால், ஒரு அரசு கொலையை மறைத்தது தெரியுமா? என கேள்வி எழுப்பினார். மேலும், கடந்த ஆட்சியில் சில வழக்குகளில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து, கடந்த ஆட்சிக் காலத்தில் பதிவான கொலை வழக்குகளின் எண்ணிக்கையை குறிப்பிட்ட ஆதவ் அர்ஜூனா, 2020 ஆம் ஆண்டில் 1,597 கொலைகள் நடைபெற்றதாக கொள்கை விளக்கப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது2021 ஆம் ஆண்டிலும் கொலைகளின் எண்ணிக்கை 1,597 ஆகவே உள்ளது. 2022ஆம் ஆண்டிலும் இதே எண்ணிக்கை தொடர்கிறது. கடந்த ஆட்சியின் செயல்பாடு சிறப்பாக இருந்திருந்தால் கொலைக் குற்றங்கள் படிப்படியாக குறைந்திருக்க வேண்டும் இல்லை என்றால் சிறிது கூடுதலாக இருக்கும் என்றார்.

அப்போது அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதற்கிடையே பேசிய ஆதவ் அர்ஜூனா
நாங்கள் எழுந்தபோது எங்களை அமர வைத்தீர்கள். இப்போது அவர்களையும் அமரச் சொல்லுங்கள். இது என்ன நியாயம், சபாநாயகரே? பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டபோது நாங்கள் அமைதியாக இருந்தோம். இப்போது ஏன் அவர்கள் அமைதியாக இருக்கவில்லை? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு அமைச்சர் கே.என். நேரு, நாங்கள் கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லுங்கள் என்றுதான் கூறுகிறோம் என்றார்.

இதன் பிறகு பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தொடர்ந்து, 2020, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக 1,597 கொலைகள் நடைபெற்றதாக கொள்கை விளக்கப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார். இதற்கிடையே, சபாநாயகர் குறுக்கிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் கேள்விகளை எழுப்பும்போது, கடந்த ஆட்சியில் நடக்கவில்லையா என்று கூறக்கூடாது. அமைச்சர் கொள்கை விளக்கப் புத்தகத்தை ஆதாரமாக வைத்து பேசுகிறார். இதில் தவறு இல்லை” என தெரிவித்தார். இதற்கு ஓ.பன்னீர்செல்வம், இந்த ஆட்சியில் நடைபெற்ற குற்றச்சாட்டுகள் குறித்து கேட்கும்போது, 2023 ஆம் ஆண்டின் கொள்கை விளக்கப் புத்தகத்தை கையில் வைத்துப் பேசுவது என்ன நியாயம்? என கேள்வி எழுப்பினார்.

எ.வ. வேலு பேசுகையில், “116 நாட்களில் இவ்வளவு குற்றங்கள் நடந்திருக்கிறது என நாங்கள் கேட்கிறோம். எங்கள் ஆட்சி சரியில்லை என்று தான் நீங்கள் வந்துள்ளீர்கள் உங்க கூற்றுப்படி தேர்தல் வந்தால்தான் ஆளும் கட்சியாக வர முடியும். ஆட்சியை ஒழுங்காக நடத்துவோம் என்று கூறி நீங்கள் ஆட்சிக்கு வந்தீர்கள். கடந்த ஆட்சியில் 116 நாட்கள் எத்தனை குற்றங்கள் நடந்தது இந்த ஆட்சியில் 116 நாட்கள் ஆட்சி செய்த காலத்தில் எத்தனை குற்றங்கள் நடந்தன என்பதை ஒப்பிட்டு பேசலாம். அதை விடுத்து 2022 ஆம் ஆண்டைப் பற்றி பேசுவது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ஆதவ் அர்ஜூனா, “கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும். மூன்று ஆண்டுகளிலும் கொலைக் குற்றங்களின் எண்ணிக்கை ஒரே அளவில் வெளிப்படைதன்மை இல்லாமல் இருக்கிறது. இதனால் தமிழக சட்டப்பேரவையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினருக்கு இடையே சட்டம்-ஒழுங்கு தொடர்பாக கடும் விவாதம் நடைபெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.