தமிழ் வளர்ச்சித்துறையில் 17 அறிவிப்புகளை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ளார்.
சட்டபேரவையில் இன்று தமிழ் வளர்ச்சித்துறை குறித்து பேசியபோது அதற்கான 17 அறிவிப்புகளை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ளார். அனைத்துக்காட்சி ஊடகங்களுக்கும் செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் தமிழ் உச்சரிப்புச் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் எனவும் தமிழை சிறப்பாக உச்சரிக்கும் செய்தி ஊடகங்களுக்கு மாநில அளவில் சிறந்த தமிழ் உச்சரிப்பு விருது வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
https://twitter.com/news7tamil/status/1516400620114128903
அலைபேசி மூலம் ஆங்கிலத்திற்கு இணையான தமிழ் கலைச் சொற்களை தாமே உள்ளீடு செய்திடும் வகையில் கலைச்சொல் தொகுப்பி எனும் செயலி உருவாக்கப்படும். மேலும், கலை பண்பாட்டுத் துறையுடன் இணைந்து திருக்குறளை நாடக வடிவிலும், நாட்டுப்புறப்பாடல்கள் வடிவிலும் பொது மக்களிடம் கொண்டு செல்ல முன்னெடுப்புகள் எடுக்கப்படும் எனவும் இதற்கான செலவுகளுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தமிழின்மீது ஆர்வத்தையும், தமிழில் எழுதுவதை ஊக்குவிக்கும் வகையிலும் மாவட்ட அளவில் தமிழ் கையெழுத்து போட்டிகள் நடத்தப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.







