தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் – எந்தப் பேருந்து நிலையத்திலிருந்து எந்த ஊருக்குச் செல்லலாம்?

தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல 15,659 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

நாடுமுழுவதும் வருகின்ற நவ்,8-ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுமக்கள் சென்னையில் இருந்து சொந்த் ஊர்களுக்கு செல்வதற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதன்படி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு நவ.5, 6, 7 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து இயக்கக் கூடிய 6,573 பேருந்துகளுடன் கூடுதலாக 9,086 சிறப்புப் பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 15,659 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

அதேபோல தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் சென்னை திரும்ப நவ.9, 10 ஆகிய தேதிகளில் பல்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு இயக்கக் கூடிய 4,382 பேருந்துகளுடன் கூடுதலாக 6,815 சிறப்புப் பேருந்துகள் என 2 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 11,197 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.

மேலும், 05.11.2026 முதல் 07.11.2026- தேதி வரை சென்னையில் உள்ள பல்வேறு பேருந்து நிலையங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

எந்தப் பேருந்து நிலையத்திலிருந்து எந்த ஊருக்குச் செல்லலாம்?

1. கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT), கிளாம்பாக்கம் –
புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம் மற்றும் கோயம்புத்தூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.
2.CMDA காலநிலை பூங்கா அருகில் திறந்தவெளி இடம், கிளாம்பாக்கம். (தற்காலிக பேருந்து நிலையம்) – வந்தவாசி, போளூர் மற்றும் திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.

3.மறைமலை நகர் தற்காலிக பேருந்து நிலையம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது – கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.

4. புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், கோயம்பேடு – கிழக்கு கடற்கரை (ECR), காஞ்சிபுரம், வேலூர், பெங்களூர் மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.

5. மாதவரம் புதிய பேருந்து நிலையம் – பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா மாநில மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.