“ஆயுள் முழுக்க அடையாளத்தை நிரூபிக்கவே மக்கள் அலைய வேண்டுமா?” – பெ.சண்முகம்

ஆயுள் முழுக்க அடையாளத்தை நிரூபிக்கவே மக்கள் அலைய வேண்டுமா மோடி அவர்களே? என பெ.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் கூறியிருப்பதாவது, “முன்னொரு காலத்தில் அனைத்திற்கும் ரேஷன் அட்டையே அடிப்படை என்றார்கள். பிறகு அனைத்திற்கும் ஆதாரம் “ஆதார்” என்றார்கள். இப்போது, வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றால் அரசிடம் இருந்து எந்த உதவிகளையும் பெற முடியாது என்கிறார்கள்.

அரசிடம் இருந்து உதவிகளை எதிர்பார்த்து இருப்பவர்கள் ஏழைகளே! எனவே, இது ஏழைகள் மீதான ஒன்றிய பாஜக அரசின் மற்றொரு கொடூரமான தாக்குதல். முதலாளிகளிடம் முகவரி கூட கேட்காத ஆட்சியாளர்கள் ஏழைகளை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு, இப்போது வாக்காளர் அடையாள அட்டை கேட்கிறார்கள்.

ஆயுள் முழுக்க அடையாளத்தை நிரூபிக்கவே மக்கள் அலைய வேண்டுமா மோடி அவர்களே?” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.