இந்திய மொழிகளில் பேசினால் ஐநாவில் கூட கைதட்டல் வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியில் மொழியில் பேசினால் ஐநாவில் கூட கைதட்டல் வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய கல்வி மாநாட்டின் தொடக்க விழாவை முன்னிட்டு பிரகதி மைதானத்தில் நடைபெற்ற விழாவில்…

இந்தியில் மொழியில் பேசினால் ஐநாவில் கூட கைதட்டல் வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய கல்வி மாநாட்டின் தொடக்க விழாவை முன்னிட்டு பிரகதி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி “தேசிய கல்வி கொள்கை” அவசியம் குறித்தும், அவற்றில் பிராந்திய மொழிகளை  தரப்பட்டுள்ள முக்கியத்துவம் குறித்தும் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.


”தேசிய கல்விக் கொள்கை” துவங்கி மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் இந்த விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி மேலும் தெரிவித்ததாவது..

“ இந்தியாவில் பல முக்கியத்துவம் வாய்ந்த பிராந்திய மொழிகள் உள்ளன. ஆனால் இதுவரை அவற்றிற்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை. ஆனால் புதிய தேசிய கல்விக் கொள்கை மூலம் ஒவ்வொரு பிராந்திய மொழிக்கும் உரிய அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

சாதரண மக்கள் தங்களுக்கு திறமை இருந்த போதும் ஆங்கிலம் பேசத் தெரியாததால் அவர்களுக்கு உரிய இடம் கிடைப்பதில்லை. கிராமப்புறங்களில் இருந்து வரும் மாணவர்கள் இந்த பிரச்னையை பெரிதளவில் எதிர்கொள்கிறார்கள். ஆனால் புதிய கல்விக் கொள்கை இதை மாற்றி அனைத்து பிராந்திய மொழிக்கும் அங்கீகாரம் அளிக்கிறது.

நான் ஐநாவில் சென்று இந்திய மொழிகளில் பேசினால்கூட எனது உரையை கேட்போரிடம் இருந்து  கைதட்டல் கிடைக்கிறது. தேசிய கல்விக் கொள்கையில் பல திருத்தங்களை கொண்டு வந்து பிராந்திய மொழிகளை முன்னேற்றுவதற்கு வழிவகை செய்கிறது. எதிர்கட்சிகள் இதனை தேவையில்லாமல் எதிர்க்கின்றன.

தேசிய கல்விக் கொள்கையின் மூலம் பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் அளித்து மொழியை வைத்து வெறுப்பு அரசியல் செய்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளோம் “ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.