5 கோடியே 50 லட்சம் ரூபாய் மோசடி வழக்கில், தென் கொரிய நாட்டைச் சேர்ந்த நபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை நொளம்பூரைச் சேர்ந்த தர்ம லிங்கம் என்பவர் ஆவடி காவல் ஆணையரக அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் KEPL இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ஷெனாய் நகர், சென்னையில் கட்டுமான பொருள் விற்பனை நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், கடந்த 2018-ஆம் ஆண்டில் தென் கொரியா நாட்டை சேர்ந்த கீம் ஜெஹியோங் க்ரூவ் செம்பரம்பாக்கத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுமான பொருட்களை வாங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், 38 கோடியே 62 லட்சத்து 78,401ரூபாய்க்குக் கட்டுமான பொருட்கள் வாங்கியதாகவும் அதில் 33 கோடியே 12 லட்சத்து 44.309 ரூபாய் ரொக்கமாகச் செலுத்திய பிறகு மீதித் தொகை 5 கோடியே 50 லட்சத்து 34093 ரூபாய் செலுத்தாமல் தலைமறைவாகிவிட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
அண்மைச் செய்தி: ‘டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்’
ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தென் கொரியா நாட்டைச் சேர்ந்த கீம் ஜெஹியோங் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். அதில் அவர் பெங்களூரில் தலைமறைவாக இருப்பதை அறிந்த போலீசார் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்துள்ளனர். சென்னையில் பணமோசடியில் ஈடுபட்ட தென் கொரியா நாட்டைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








