கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரப் கங்குலி, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
நெஞ்சுவலி காரணமாக கங்குலி, கடந்த 2ஆம் தேதி கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு அஞ்சியோபிளாஸ்ட்டி சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து, மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் இருந்து வந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து கங்குலி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் நலமுடன் இருப்பதாவும், சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.







