முக்கியச் செய்திகள் இந்தியா

திருமணத்தன்று ஓடிப்போன மணமகன்; விருந்தினருக்கு அடித்த ஜாக்பாட்!

திருமண நேரத்தில் மணமகன் ஓடிவிட்டதால், விருந்தினரான வந்த இளைஞருடன் மணமகளுக்கு திருமணம் நடந்துள்ளது.

கர்நாடகா மாநிலம் சிக்கமகளுரு மாவட்டத்தை சேர்ந்த நவீன் என்பவருக்கு சிந்து என்ற பெண்ணுடன் திருமண நிச்சயம் நடந்துள்ளது. திருமண வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வந்துள்ளன. இந்நிலையில் திருமண நாளன்று, மணமகன் நவீன் மண்டபத்தை விட்டு ஓடிவிட்டது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் வேறு ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அவர் தற்கொலை செய்து கொள்வேன் என கூறியதால் நவீன் இந்த முடிவை எடுத்ததாகவும் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனால் அதிர்ச்சியடைந்த மணப்பெண் சிந்து என்ன செய்வதென அறியாமல் கண்கலங்கி நின்றுள்ளார். ஆனால் குறித்த நேரத்தில் திருமணம் நடக்க வேண்டும் என்பதில் பெண் வீட்டார் உறுதியாக இருந்துள்ளனர். அந்த நேரத்தில்தான் யாரும் எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட் நடந்துள்ளது.

திருமணத்துக்கு விருந்தினராக வந்திருந்த சந்திரப்பா என்ற நபர், தாமாக முன்வந்து மணப்பெண் சிந்துவை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். அவரை பற்றி விசாரித்த குடும்பத்தினர், இந்த திருமணத்துக்கு உடனடியாக ஓகே சொல்லிவிட்டனர். இறுதியில் இருவீட்டார் சம்மதத்துடன் சந்திரப்பா- சிந்துவுக்கு கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பவானிபூா் இடைத்தேர்தலில் மம்தா வெற்றி

Halley Karthik

கோடநாடு வழக்கு: காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

EZHILARASAN D

மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த டெல்லி செவிலியர் – குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

Jayakarthi

Leave a Reply