3-வது டெஸ்ட் போட்டி : முதல் நாள் முடிவில் ஆஸி.2 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் குவிப்பு!

3-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் குவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…

3-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் குவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றதால், தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பேட் செய்தது. அணியின் தொடக்க வீரர் வார்னர் 5 ரன்கள் எடுத்திருந்தபோது, சிராஜ் பந்துவீச்சில் புஜாராவிடம் கேட் கொடுத்து வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரரான புகோவ்ஸ்கி 62 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இன்றைய ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் குவித்துள்ளது. லபுஸ்சேன் 149 பந்துகளுக்கு 67 ரன்களுடனும், ஸ்டீவ் சுமித் 64 பந்துகளுக்கு 31 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply