முக்கியச் செய்திகள் தமிழகம்

“சாலையோர வியாபாரிகளுக்கு விரைவில் கடன் தொகை” – சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்

வங்கி கடன் உதவி பெற விண்ணப்பித்த சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 கடன் தொகையை விரைவாக வழங்கிட வங்கி அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் நிறுவன அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் திருப்பி செலுத்தக்கூடிய வகையில் பணி மூலதன கடனாக ரூ.10.000 வரை வழங்கும் திட்டம் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தால் பாரதப் பிரதமரின் ஆத்ம நிர்பார் நிதி (சுயசார்பு) திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்டது.

தற்போதுவரை 94,430 விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு 35,398 விண்ணப்பங்களுக்கு வங்கிகள் மூலம் கடன் தொகை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 29,706 சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 வீதம் கடன் வழங்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் உதவி தொகையை விரைந்து வழங்க வேண்டும் என தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் வங்கி அலுவலர்களுடன் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

சாலையோரம் வசிப்போருக்கு உதவிக்கரம் நீட்டிய நெதர்லாந்து இளைஞர்!

Jayapriya

ராஜ் குந்த்ராவின் ஆபாசப் பட விவகாரம்.. பிரபல தமிழ் நடிகை விளக்கம்!

Gayathri Venkatesan

முதல்வராக நாளை பொறுபேற்கிறார் மம்தா பானர்ஜி!