ஒலிம்பிக் போட்டி முக்கியச் செய்திகள்

டோக்கியோ பாரா ஒலிம்பிக்: இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா

டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் பெண்கள் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்த போட்டியில் சீன வீராங்கனை மியாவ் ஜாங்கை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் பவினா பென். ஆட்டத்தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய சீன வீராங்கனையை பவினா ஆட்ட இறுதியில் 3-2 செட் கணக்கில் வென்றார்.

இதன் மூலம் இந்தியாவுக்கு வெள்ளி உறுதியாகியுள்ளது. இறுதி போட்டியில் வெற்றிபெறும் நிலையில் இந்தியா தங்கம் வெல்லும். இதற்கிடையில், “பவினா கடந்த 20 ஆண்டுகளாக டேபிள் டென்னிஸ் விளையாடி வருகிறார். இம்முறை நிச்சயம் அவர் தங்கம் வெல்வார்.” என்று அவரது தந்தை ஹஸ்முக்பாய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

பாலிவுட் படத்தில் ஷாருக்கான் ஜோடியாகிறாரா நயன்தாரா?

Ezhilarasan

லாபத்தை அள்ளும் ஹிமாச்சல் செரி!

Vandhana

உத்தரகாண்ட் மாநில முதல்வருக்கு கொரோனா பாதிப்பு!

Halley karthi