காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சோனியா காந்தி டெல்லியில் உள்ள கங்காராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ள தகவலின் படி, டெல்லியில் நிலவிவரும் காற்றுமாசு காரணமாக சோனியாகாந்தி பரிசோதனைக்கு வந்துள்ளார். சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளது. இருப்பினும் அவருக்கு இருமல் பிரச்சனை உள்ளது. ஆகையால் அவர் நுரையீரல் மருத்துவரின் கண்காணிப்பில் உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி. 1998 – 2017 மற்றும் 2019- 2022 வரையிலான காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராகச் சோனியா இருந்துள்ளார். 79 வயதான சோனியா காந்தி, கடந்த சில ஆண்டுகளாகவே வயது மூப்பு காரணமாகத் தீவிர அரசியலில் இருந்து சற்று விலகியே இருந்தார். நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களில் பங்கேற்றாலும் முன்பு போல அதிகளவில் கட்சி செயல்பாடுகளில் பங்கேற்காமலேயே இருந்தார்.







