பிரபல ஹாலிவுட் இயக்குநர்[கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் ‘தி ஒடிசி’. ஹோமர் என்பவரால் எழுதப்பட்ட கிரேக்க புராணமான ‘ஒடிசி’-யை அடிப்படையாகக் கொண்டு உருவக்கப்பட்ட இப்படத்தை யூனிவர்சல் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
இப்படத்தில் மேட் டாமன், டாம் ஹாலண்ட், ஆன் ஹாத்வே, ராபர்ட் பாட்டின்சன், சார்லிஸ் தெரான், லுபிடா நியாங்கோ, ஜெண்டயா, ஜான் பெர்ன்தால், ஹிமேஷ் படேல், ஜான் லெகுயிசாமோ மற்றும் மியா கோத் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
உலகம் முழுவதும் ஜூலை 17 வெளியான தி ஒடிசி திரைப்படம் இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் இந்தியாவில் முதல் நாளில் ரூ. 16.04 கோடி நிகர வசூல் செய்துள்ளது. இந்த நிலையில் இரண்டாவது நாளான நேற்று ரூ.20.68 கோடி நிகர வசூல் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் தி ஒடிசி திரைப்படம் இந்தியாவில் ரூ.36.72 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது,
இந்திய ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள இப்படம் மூன்றாவது நாளில் ரு.50 கோடி வசூலை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




