முக்கியச் செய்திகள் குற்றம்

பவானி அருகே மது போதையில் தந்தையை தாக்கிய மகன் கைது

ஈரோடு மாவட்டம் பவானி அருகே குடிக்க வேண்டாம் என அறிவுரை சொல்லிய தந்தையை குடிபோதையில் கட்டையால் தாக்கிய வாலிபரை அம்மாபேட்டை போலீஸார் கைது செய்தனர்.

காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஈரோடு மாவட்டம், பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள ஆனந்தம்பாளையம் பகுதியில் வசித்து வருகிறேன். எனது பெயர் முனுசாமி. எனது மனைவியுடன் வசித்து வருகிறேன். எனக்கு ஒரு மகன் உள்ளார். அவர் பெயர் தினேஷ்குமார், கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி ஊரை சுற்றிக் கொண்டு வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்தார். மேலும் அடிக்கடி என்னுடனும் எனது மனைவியுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.

நேற்று இரவு எனது மகன் தினேஷ் குமாருக்கு போதை அதிகமாகவே அம்மா என்று பாராமல் தகாத வார்த்தைகள் பேசி தாக்கியிருக்கிறார். இதையடுத்து அங்கு வந்த நான் தினேஷ் குமாரை வன்மையாக கண்டித்தேன். இதில் போதையில் இருந்த தினேஷ் குமார் அருகிலிருந்த கட்டையால் என்னைத் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த நான்
அங்கிருந்து தப்பி ஓடி பவானியில் உள்ள தனியார் மருத்துவ சிகிச்சைக்காக
சேர்ந்தேன் என்று அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், முனுசாமி அளித்த புகாரின் பேரில் மகன் தினேஷ்குமாரை
கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

புதுச்சேரியில் முழு ஊரடங்கு? தமிழிசை செளந்தரராஜன் விளக்கம்

Halley Karthik

புதிய விதிகளின்படி அதிகாரிகளை நியமித்துள்ளது ட்விட்டர்: நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

Ezhilarasan

இடைநீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்களுக்கும் சேமநல நிதி பாக்கித் தொகை!

Halley Karthik