பாலியல் வன்முறை; போக்சோவில் வாலிபர் கைது

கல்லூரி மாணவியின் ஆபாச புகைப்படத்தை வைத்து பாலியல் துன்புறுத்துதல் கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து கைது செய்தனர்.  நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த R.புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் (வயது…

கல்லூரி மாணவியின் ஆபாச புகைப்படத்தை வைத்து பாலியல் துன்புறுத்துதல் கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து கைது செய்தனர். 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த R.புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் (வயது 24). இவர் நாமக்கல் தனியார் மோட்டார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கல்லூரி மாணவியை வீடியோகால் மூலம் பேசி ஆபாச படங்களை அவரது போனில் பதிவுசெய்துள்ளார். பின்னர் அந்த ஆபாச படங்களை காட்டி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வற்புறுத்தி வந்துள்ளாதாக கூறப்படுகிறது.

இதற்கு கல்லூரி மாணவி மறுப்பு தெரிவிக்கவே ஆபாச படங்களை மாணவியின் தாய்க்கு மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் வாலிபர் அஜீத் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.