கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு; போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

ராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பாளையம் பகுதியில் கல்லூரி மாணவியிடம் வீடியோகால் மூலம் பேசி, ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் தொந்தரவு செய்த அஜித் என்ற வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல்…

ராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பாளையம் பகுதியில் கல்லூரி மாணவியிடம் வீடியோகால் மூலம் பேசி, ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் தொந்தரவு செய்த அஜித் என்ற வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த R.புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் (வயது24), நாமக்கல் தனியார் மோட்டார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பழக்கத்தில் இருவரும் அவ்வப்போது வீடியோவில் பேசி வந்துள்ளனர். இந்நிலையில், அஜித் கல்லூரி மாணவியை மிரட்டி வீடியோகாலில் ஆபாசமாகப் படம் எடுத்துள்ளார்.

அண்மைச் செய்தி: ‘கோலிவுட்டின் கிரீடம் விஜய் கதை’

அதன்பின்னர் ஆபாசப் படங்களைக் காட்டி அந்த கல்லூரி பெண்ணிடம் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மேலும்,பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த நிலையில், கல்லூரி மாணவி அதற்கு மறுப்பு தெரிவிக்கவே ஆபாசப் படங்களை மாணவியின் தாய்க்கு பகிர்ந்த அஜித், சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். உடனடியாக புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் அந்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.