முக்கியச் செய்திகள் தமிழகம்

‘திமுகவுடனான நல்லுறவில் குழப்பம் ஏற்படுத்த மதிமுகவில் சிலர் முயல்கின்றனர்’ – வைகோ குற்றச்சாட்டு

திமுகவுடனான நல்லுறவில் குழப்பம் ஏற்படுத்த மதிமுகவில் சிலர் முயல்வதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் மதிமுகவின் 28-வது பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், அவரின் மகன் துரை வைகோ, தலைமைக் கழகச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், கட்சிக்கு களங்கம் ஏற்படுத்துபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வைகோவுக்கு முழு அதிகாரம், மேகதாது விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கை தமிழ்நாடு அரசு துரிதப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் மதிமுக அவைத் தலைவர் துரைசாமி, திருவள்ளூர், சிவகங்கை, விருதுநகர் மாவட்டச் செயலாளர்கள் உள்பட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்கவில்லை.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அண்மைச் செய்தி: அதிமுக அமைப்பு தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறும் – ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு

மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் விதிகளில் முக்கிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, மதிமுக பொதுச் செயலாளருக்கு கட்சிப் பணி ஆற்ற முடியாத நிலை ஏற்பட்டால், அவருக்கான அதிகாரத்துடன் அவைத் தலைவர், பொருளாளர், துணை பொதுச்செயலாளர்கள் ஆகியோர் பொதுச் செயலாளருக்கான பணியை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே , தலைமைக்கழகச் செயலளாராக தேர்ந்தெடுக்கப்பட்ட துரை வைகோ, ஆனந்தக் கண்ணீர் வடித்தது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும், திமுகவுடனான நல்லுறவில் குழப்பம் ஏற்படுத்த மதிமுகவில் சிலர் முயல்வதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மயான பாதை ஆக்கிரமிப்பு; இருளர் பழங்குடி மக்களுக்கு ஏற்பட்ட அவலம்

G SaravanaKumar

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பின் அதிமுக தன்னிடம் வரும்: வி.கே.சசிகலா

Arivazhagan Chinnasamy

செல்லப்பிராணியாக வளர்த்த முதியவரை கொன்ற கங்காரு

Web Editor