சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில், எம்ஜிஆர் சிலையை நிறுவ வேண்டும் – அதிமுக

சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில், எம்ஜிஆர் சிலையை நிறுவ வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை அதிமுக சார்பில் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் பேசிய அவர், தமிழ்நாட்டில் பல்வேறு பணிகள் நடைபெற்று வரும் நிலையில்,…

சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில், எம்ஜிஆர் சிலையை நிறுவ வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை அதிமுக சார்பில் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் பேசிய அவர், தமிழ்நாட்டில் பல்வேறு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நிதிநிலை அறிக்கையில் 3,865 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அனைத்து பணிகளையும் நிறைவேற்ற 28,370 கோடி ரூபாய் நிதி தேவைப்படுவதாகவும் கூறினார்.

அண்மைச் செய்தி: ‘திமுகவுடனான நல்லுறவில் குழப்பம் ஏற்படுத்த மதிமுகவில் சிலர் முயல்கின்றனர்’ – வைகோ குற்றச்சாட்டு

மேலும், தமிழ்நாட்டில் ஜோலார்பேட்டையிலிருந்து பர்கூர், ஓசூர் வழியாக பெங்களுரூவுக்கு புதிய ரயில்பாதை அமைக்க வேண்டும் எனவும், கரூர்- சேலம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் – கூடுவாஞ்சேரி இடையேயான ரயில்பாதையை இருவழியாக மாற்ற வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், சென்னை புரட்சிதலைவர் எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையத்தில், எம்ஜிஆர் சிலையை நிறுவ வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.