U19 மகளிர் டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி

19 வயதுக்கு உட்பட்ட மகளிர் டி-20 கிரிக்கெட் உலக கோப்பையை வென்று இந்தியா அணி வென்று வரலாற்று சாதனை புரிந்துள்ளது. 19 வயதுக்கு உட்பட்ட மகளிர் டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பையை ஐசிசி நடத்தி வருகிறது.…

19 வயதுக்கு உட்பட்ட மகளிர் டி-20 கிரிக்கெட் உலக கோப்பையை வென்று இந்தியா அணி வென்று வரலாற்று சாதனை புரிந்துள்ளது.

19 வயதுக்கு உட்பட்ட மகளிர் டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பையை ஐசிசி நடத்தி வருகிறது. முதல் முறை மகளிருக்கான 19 வயதிற்கு உட்பட்ட டி 20 உலக கோப்பை போட்டி இதுவே  ஆகும். முதல் உலகப் போட்டி என்பதால் தொடரின் ஆரம்பத்தில் இருந்தே எந்த அணி வெற்றி பெறும் என கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நீடித்தது.

16 அணிகளுடன் தொடங்கிய இப்போட்டியில் நியூசிலாந்து, இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு  முன்னேறி இருந்தது.  இதனையடுத்து ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்துடனும், இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் மோதிய நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கும் முன்னேற்றம் அடைந்தன.

நேற்று நடைபெற்ற  இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி  முதலில் பேட்டிங் செய்தது. முதலில் களமிறங்கிய  இலங்கை வீராங்கனைகள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இங்கிலாந்து அணி.

கடைசியாக 17.1 ஓவர்களில் வெறும் 68 ரன்கள் மட்டுமே எடுத்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி சார்பில் டைடாஸ் சாது, அர்ச்சனா தேவி, பர்ஷவி சோப்ரா உள்ளிட்டோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். இங்கிலாந்து வீராங்கனை ரயானாவின் கேட்ச்சை  அர்ச்சனா தேவி கைப்பற்றியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இதனைத் தொடர்ந்து ஆடிய இந்திய மகளிர் அணி, மூன்று விக்கெட்டுகளை இழந்து 14 ஓவரிலேயே இலக்கை அடைந்து வெற்றி வாகை சூடியது. இப்போட்டியில் வெற்றி பேற்றதால்  மகளிருக்கான 19 வயதுக்கு உட்பட்டோர் டி 20  முதல் உலக கோப்பையை  இந்திய மகளிர் அணி வென்று வரலாற்று சாதனையும் புரிந்துள்ளது.

உலக கோப்பையை போட்டியை இந்திய மகளிர் அணி வென்று சாதனை படைத்தற்காக பிசிசிஐ செயாலாளர் ஜெய்ஷா 19 வயதிற்கு உட்பட்ட மகளிர் அணிக்கு ரூ.5 கோடியை பரிசாக அறிவித்துள்ளார்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.