கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் சோமவாரபிரதோஷச விழா! ஏராளமான பக்தர்கள் தரிசனம்

கருர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சோமவாரபிரதோஷச விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் பெற்றனர். கரூர் மாநகரின் மையப்பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலம் வாய்ந்த…

கருர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சோமவாரபிரதோஷச விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் பெற்றனர்.
கரூர் மாநகரின் மையப்பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலம் வாய்ந்த இந்த ஆலயம் தேவாரப் பாடல்கள் பெற்ற கொங்கு ஸ்தலமாகும்.
இந்த ஆலயம் காமதேனு வழிபட்ட தலமாகும். இந்த சிவ ஆலயத்தினை திருஞானசம்பந்தர் சித்தர் கருவூரார் அருணகிரிநாதர் போன்றோர் பாடியுள்ளனர் சித்தர் கருவறாருக்கு தனி சன்னதி உள்ளது.
இச்சிறப்பு வாய்ந்த திருத்தளத்தில் சித்திரை மாத சோமவார திங்களை முன்னிட்டு அருள்மிகு அலங்காரவல்லி அருள்மிகு சௌந்தரனாயகி உடனுறை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர்க்கும் நந்தி பகவானுக்கும் சிறப்பு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பல்வகை தீப உபசரிப்புடன் மகாதீபம் காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் பெற்றுச் சென்றனர்.
-சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.