“எல்லா சமூக மக்களுக்கும் சமூக நீதி கிடைக்க வேண்டும்” – ஜி.கே மணி!

தீரன் சின்னமலை வரலாற்று பதிவுகளை பாட புத்தகங்களில் இடம் பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி.கே மணி தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் தீரன் சின்னமலை 220வது நினைவு நாளையொட்டி பாமக ராமதாஸ் சார்பில் ஜிகே மணி தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜிகே மணி, “தீரன் சின்னமலை வரலாற்று பதிவுகளை பாட புத்தகங்களில் இடம் பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,

எல்லா சமூக மக்களுக்கும் சமூக நீதி கிடைக்க வேண்டும். அதில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு கேட்கிறோம். அதே போல பெருமைக்குரிய கொங்கு வேளாளர் கவுண்டர் உட்பட அனைத்து சமூக மக்களுக்கும் தொகுப்பு இடஒதுக்கீடு முறையில் அரசு உரிய இடஒதுக்கீடு பகிர்ந்து அளிக்க வேண்டும் கேரள உட்பட பல்வேறு மாநிலங்களில் உள்ளது. தமிழ்நாட்டில் கொண்டு வந்தால் அனைத்து சமுதாய மக்களுக்கும் சலுகைகள் போய் சேரும் வகையில் தமிழக அரசு சமூக நீதி படிக்கல்லாக செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.