கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று தொடக்கம்

கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் இன்று தொடங் குகிறது. கொரோனா 2 வது அலை வேகமாக பரவியதை அடுத்து, ஏப்ரல் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில், கொரோனா பரவல் தற்போது…

கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் இன்று தொடங் குகிறது.

கொரோனா 2 வது அலை வேகமாக பரவியதை அடுத்து, ஏப்ரல் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில், கொரோனா பரவல் தற்போது குறைந்து வரு வதை அடுத்து, செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

அதேபோல், கல்லூரிகளில் இளநிலை 2 ஆம் ஆண்டு, இறுதியாண்டு, முதுநிலை இறுதியா ண்டு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. பொறியியல் படிப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கலை, அறிவி யல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றதால் நேரடி வகுப்பு கள் நடைபெறவில்லை.

இந்நிலையில், கலை, அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அக்டோபர் மாதம் 4ஆம் தேதி முதல் வழிகாட்டு நெறிமுறைகளுடன் நேரடி வகுப்புகள் தொடங்கப் படும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்திருந்தது. அதன்படி முதலாமாண்டு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் இன்று தொடங்குகிறது.

2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் வகுப்புகள் நடைபெறும் நிலையில், முதலாமாண்டு மாணவர்களுக்கும் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறு கிறது. தடுப்பூசி செலுத்திய மாணவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என்றும் உரிய பாதுகாப்பு வழிமுறைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி நேரடி வகுப்புகளை நடத்த கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.