முக்கியச் செய்திகள் தமிழகம்

அடுக்குமாடி குடியிருப்பில் எழுந்த புகை; மூதாட்டி, செவிலியர் உயிரிழப்பு

மின் கசிவால் வீட்டில் ஏற்பட்ட புகையில் மூச்சு திணறி 92 வயது மூதாட்டி, அவரை கவனித்த வந்த 28 வயது செவிலியர் உயிரிழந்தனர்.

சென்னை அசோக்நகர் ஸ்ரீஜி அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் ஜானகி(92) என்பவர் தனது மகள் அப்பயையா (70) உடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக தாய் ஜானகிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவரை கவனித்து கொள்ளவதற்காக ஜெயப்பிரியா(27) என்ற செவிலியரை பணிக்காக நியமித்துள்ளனர். நேற்று நள்ளிரவு ஜானகி, செவிலியர் படுக்கையறையிலும், ஜெயா ஹாலிலும் தூங்கிக் கொண்டிருந்தனர். சென்னையில் நேற்று இரவு இடியுடன் பலத்த மழை பெய்து வந்தது. அப்போது வீட்டின் சமையல் அறையில் திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அதில் வீடு முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனால் அச்சம் அடைந்த பக்கத்து வீட்டினர் கதவை தட்டியுள்ளனர்.நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததை அடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கபட்டது. அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த மூதாட்டி ஜானகி, செவிலியர் ஜெயப்பிரியா உயிரிழந்த நிலையில் கிடந்தனர். அப்பபையா வேறு அறையில் இருந்ததால் அவருக்கு எந்த பாதிப்பு ஏற்படவில்லை. உயிரிழந்த மூதாட்டி ஜானகி மற்றும் ஜெயப்பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து குமரன் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் மதுரவாயலைச் சேர்ந்த செவிலியர் ஜெயப்பிரியா குடும்ப வறுமை காரணமாக கடந்த 20 நாட்களுக்கு முன் தான் மூதாட்டியை கவனிப்பதற்க்காக பணிக்கு சென்றுள்ளார்.ஜெயப்பிரியாவிற்கு நான்கு வயது மற்றும் இரண்டு வயதில் பெண் குழந்தைகள் இருக்கிறது. மூதாட்டியை கவனிப்பதற்காக கடந்த 20 நாட்களும் வீட்டிற்கு செல்லாமல் வேலைப்பார்த்து வந்துள்ளார். நேற்று இரவு வீடியோ காலில் தனது குழந்தைகளுடன் பேசியுள்ளார். இந்த நிலையில் தற்போது உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முதல்வர் ஸ்டாலினை அருவருக்கத்தக்க வகையில் விமர்சித்த நபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

Web Editor

ரிலையன்ஸ் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிய TCS

Jayapriya

உயர்கல்வி நிறுவனங்களில் 10.5% இட ஒதுக்கீடு : தமிழக அரசு உத்தரவு!

Halley Karthik