முக்கியச் செய்திகள் தமிழகம்

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள்: அமைச்சர் சொன்ன தகவல்

தமிழ்நாட்டில் 10 நகரங்களில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் வினா – விடை நேரத்தில் எம்.எல்.ஏ-க்களின் கேள்விகளுக்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்து பேசினார். அப்போது, மதுரை உள்ளிட்ட 10 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் பணிகளில் சில காலம் தொய்வு ஏற்பட்டதாகவும் தெரிவித்த அவர், தற்போது ஒவ்வொரு நகரமாக ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் முடிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், மதுரை உள்பட 10 நகரங்களிலும் விடுபட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். அடுத்ததாக, பாதாள சாக்கடைத் திட்டத்துக்கு குழாய்கள் கிடைப்பதில் சிரமம் இருப்பதால் திட்டப்பணிகள் தாமதமாவதாகவும், மாற்று ஏற்பாடு செய்தவுடன் பணிகள் விரைந்து நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

வடசென்னை பகுதிகளில் கழிவுநீர் குழாய் கட்டமைப்பை மறுசீரமைக்க ரூ.3,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்படும் எனவும், குடிநீர் குழாய்களில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

– கோகுலப் பிரியா, மாணவ ஊடகவியலாளர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

’வேதனையை ஏற்படுத்தி விட்டது’: விஷால் புகார் குறித்து தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி விளக்கம்!

Gayathri Venkatesan

உக்ரைனிலிருந்து இந்தியர்கள் வெளியேற வேண்டும்: இந்திய தூதரகம்

Ezhilarasan

ஜேஇஇ முதன்மை தேர்வு ஒத்திவைப்பு!

Halley Karthik