முக்கியச் செய்திகள் தமிழகம்

ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதியில் பெரும்பாலும் செலவு செய்யப்பட்டுவிட்டது – மத்திய அரசு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பெரும்பாலும் செலவு செய்யப்பட்டுவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட ரூ.3,978 கோடியில் ரூ.3,376.96 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழ்நாட்டின் 12 ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மத்திய அரசால் ரூ.3,978 கோடி ஒதுக்கப்பட்டது.

இந்தியாவில் 99 சுமார்ட் சிட்டி திட்ட பணிகளுக்கு இதுவரை 48 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.

இதில் தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, கோவை, சேலம், நெல்லை, திண்டுக்கல், தஞ்சாவூர், திருப்பூர், வேலூர், மதுரை, ஈரோடு மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 12 ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.3,978 கோடியை மத்திய அரசு ஒதுக்கியிருப்பதாகவும்,

இதில் சென்னைக்கு ரூ.497.62 கோடி, தூத்துக்குடிக்கு ரூ.294 கோடி , ஈரோடு ரூ.294 கோடி, மதுரைக்கு ரூ.392 கோடி, கோவை ரூ.490 கோடி, வேலூர் ரூ.343 கோடி, சேலம் ரூ.392 கோடி, திருப்பூர் ரூ.392 கோடி, தஞ்சாவூர் ரூ.294கோடி, திண்டுக்கல் ரூ.2 கோடி, நெல்லை ரூ.294 கோடி மற்றும் திருச்சி ரூ.294 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தனது குறிப்பில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இவ்வாறு ஒதுக்கப்பட்ட தொகையில், ரூ.3,376.96 கோடி ரூபாயை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு தற்போது வரை செலவு செய்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பாகிஸ்தான் பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி

Gayathri Venkatesan

30 முதல் 40 ரூபாய் விலைக்கு வாங்கும் தக்காளி, ரூபாய் 100-க்கு மேல் விற்பனை; விவசாயி வேதனை

Halley Karthik

ஈழத்தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் – முன்னாள் எம்பி வேதனை

EZHILARASAN D