முக்கியச் செய்திகள் தமிழகம்

மதுரை எய்ம்ஸ் – ரூ.1500 கோடி நிதி ஒதுக்கீடு

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு ஜப்பானை சேர்ந்த ஜைக்கா நிறுவனம் முதல் கட்டமாக 1,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு, தோப்பூரில் 224 ஏக்கரில் 2019 ஜனவரி 27ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு ஜப்பானனை சேர்ந்த ஜைக்கா நிறுவனம் முதல் கட்டமாக 1,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், முன் முதலீட்டு பணிகள் 92% முடிவடைந்தள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், மொத்த திட்ட மதிப்பான 1,977 கோடியில் தற்போது 1,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நிதியை அக்டோபர் 26-ஆம் தேதிக்குள் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு பின் கட்டுமான பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், விரைவில் கட்டுமான பணிகள் துவங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அண்மைச் செய்தி: ‘செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி முடிக்க ரூ.92 கோடி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு’

2019-ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டும் போது 1,264 கோடியாக இருந்த திட்ட மதிப்பீடு, தற்போது, இருந்தது 1,977 கோடியாக உயர்ந்துள்ளது. 3 வருடம் திட்டம் கிடப்பில் போடப்பட்டதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மக்களுக்காக ஓயாது உழைக்க வேண்டும்; தொண்டர்களுக்கு முதலமைச்சர் கடிதம்

G SaravanaKumar

கட்டிட காண்டிராக்டரை தாக்கிய வழக்கு; நீதிமன்றத்தில் நடிகர் சந்தானம் ஆஜர்

G SaravanaKumar

டெல்டா மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மழை

EZHILARASAN D