சூறாவளி காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை- அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் சேதம்!!

கெங்கவல்லி மற்றும்  அதன்  சுற்றுவட்டாரப்  பகுதிகளில் சூறாவளி  காற்றுடன் அத்திக்கட்டி, ஆலங்கட்டி  மழை பெய்தது.  இதனால் அறுவடைக்குத்  தயாராக  இருந்த இரண்டாயிரம் வாழை மரங்கள், நெல் மற்றும் எள் பயிர்கள் கடும் சேதமடைந்துள்ளன. சேலம்…

கெங்கவல்லி மற்றும்  அதன்  சுற்றுவட்டாரப்  பகுதிகளில் சூறாவளி  காற்றுடன் அத்திக்கட்டி, ஆலங்கட்டி  மழை பெய்தது.  இதனால் அறுவடைக்குத்  தயாராக  இருந்த இரண்டாயிரம் வாழை மரங்கள், நெல் மற்றும் எள் பயிர்கள் கடும் சேதமடைந்துள்ளன.
சேலம் மாவட்டம்  கெங்கவல்லி  மற்றும் அதன்  சுற்றுவட்டாரப்  பகுதிகளில்  ஏராளமான ஏக்கர்களில் நெல், மக்காசோளம், மரவள்ளி கிழங்கு, பருத்தி, வாழை உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.
இந்நிலையில்  கெங்கவல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் அத்திக்கட்டி, ஆலங்கட்டி மழை பெய்தது. இந்த கனமழைக்குப் பள்ளக்காடு, நடுவலூர், உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு, அறுவடைக்குத் தயாராக இருந்த  2,000 வாழை மரங்கள் வேறொடு  சாய்ந்து  சேதமாகியுள்ளன.
மேலும் ஏராளமான ஏக்கர்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், எள், வெங்காயம், கத்தரிக்காய் உள்ளிட்ட பயிர்கள் சாய்ந்து சேதமானது. அப்பகுதியில் இருந்த மூன்று வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டு சேதமாகியுள்ளன. இதனிடையே வீட்டில் யாரும் இல்லாத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சூறாவளி காற்றுடன்  அத்திக்கட்டி , ஆலங்கட்டியுடன் பெய்த கன மழைக்கு  விளை நிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட வாழை, நெல், எள், மற்றும் வீடுகள் சேதமாகி  பல  இலட்ச ரூபாய்  இழப்பீடு  ஏற்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்து  உரிய நிவாரணம் வழங்க வேண்டும்  என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
—சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.