புதுக்கோட்டை அருகே , முதுமை காரணமாக இறந்த ஜல்லிக்கட்டு
காளை அடக்கம் செய்யப்பட்டது .
புதுக்கோட்டை மாவட்டம் , மெய் வழி சாலை பகுதியைச் சேர்ந்தவர் சாலை சக்கரபாணி . இவர் ஜல்லிக்கட்டு ஆர்வலர், இவர் வளர்த்து வந்த 21 வயதான ராமு என்ற ஜல்லிக்கட்டு காளை வயது முதுமை காரணமாக உயிரிழந்தது .
மேலும் , இக்காளை 2008 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை , புதுக்கோட்டை , திருச்சி மற்றம் சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொண்டு , சிறப்பாக விளையாடி பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளது .
நாட்டின காளையான ராமு உயிரிழந்ததைத் தொடர்ந்து , அந்த பகுதி மக்கள் இறந்த காளைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், ஜல்லிக்கட்டு காளை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மேலும், மனிதர்களுக்கு செய்வது போல் இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்யப்பட்டது.
—கு.பாலமுருகன்







