நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதவிட்ட உத்தரபிரதேச மாநில பாஜகவை சேர்ந்த ஹர்சித் ஸ்ரீவத்ஷாவை போலீசார் செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தின் முன்னாள் இளைஞரணி செயலாளர் ஹர்சித் ஸ்ரீவத்ஷா நேற்று நபிகள் குறித்து அவதூறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஹர்சித் ஸ்ரீவத்ஷாவுக்கு எதிராக மதம், இனம், மொழி ஆகியவற்றின் மீது அவதூறு கருத்துக்களை பரப்புவதற்கான தண்டடை பிரிவு 153ஏ, 295ஏ, 507 மற்றும் 67 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு கொலோனல்கஞ்ச் காவல் நிலையத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய ஏடிஜிபி பிரசாந்த் குமார், பாஜகவின் கான்பூர் மாவட்ட முன்னாள் இளைரணி செயலாளர் ஹர்சித் ஸ்ரீவத்ஷா மத தலைவர்கள் குறித்து அவதூறு கருத்து பரப்பிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கமிஷனர் விஜய் சிங் மீனா கூறுகையில், மத ரீதியிலான தவறான கருத்துக்களை பரப்புபவர்கள் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது என கூறினார்.
கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மா முகமது நபிகள் குறித்து தவறான கருத்துக்களை தெரிவித்ததையடுத்து கான்பூரில் கலவரம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.








