உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்!

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை காணொளி கட்சி வாயிலாக திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

2026-27-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் வருகின்ற ஆகஸ்ட் 5-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் படஜெட் தாக்கல் இதுவாகும். இது தொடர்பாக முதலமைச்சர் விஜய் துறை வாரியாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் கொறடாவான ஏ.வ.வேலு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 28-07-2026 செவ்வாய் கிழமை மாலை 5.00 மணி அளவில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும்.

அதுபோது கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் மேற்கொள்ள வேண்டிய அனுகுமுறைகள், கேட்கப்படவேண்டிய கேள்விகள் உ:ள்ளிடவை குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.