ஜமாத் தலைவருக்கு கொரியரில் மண்டை ஓடு : போலிசார் விசாரணை

தஞ்சாவூர்  அருகே தனியார் கொரியர் பார்சலில் ஜமாத் தலைவருக்கு மண்டை ஓடு வந்ததால்  போலிசார் அதனை கைப்பற்றி  விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே முகமது பந்தர் பள்ளிவாசல் உள்ளது. இதில்…

தஞ்சாவூர்  அருகே தனியார் கொரியர் பார்சலில் ஜமாத் தலைவருக்கு மண்டை ஓடு வந்ததால்  போலிசார் அதனை கைப்பற்றி  விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே முகமது பந்தர் பள்ளிவாசல் உள்ளது. இதில்
ஜமாத் தலைவராக முகமது காசிம் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் முகமது காசிம் பெயருக்கு பள்ளிவாசல் முகவரியில் நவ்மான்பாய் கான் என்கிற பெயரில் ஃபிரெஞ்ச் எக்ஸ்பிரஸ் கொரியரில் பார்சல் வந்துள்ளது.

இதனை அடுத்து முகமது காசிம் அந்த பார்சலை திறந்து பார்த்துள்ளார். அப்போது அதில் ஒரு மனித மண்டை ஓடு இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த முகமது காசிம் கொரியரில் தெரிவிக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் கோவாவில் இருப்பதாகவும் தான் எதுவும் பார்சல் அது போன்று அனுப்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

எனவே முகமது காசிம் திருவையாறு துணை காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த திருவையாறு காவல்துறை கண்காணிப்பாளர் ராஜ்மோகன் பார்சலில் வந்த மண்டை ஓட்டை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி உள்ளார்.

பார்சலில் வந்த மண்டை ஓடு ஆணா, பெண்ணா, வயது,  எப்போது இறந்தது உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும் இது குறித்து முகம்மது பந்தர் பள்ளிவாசலின் ஜமாத் தலைவர் முகமது காசிமிடம்  புகாரினை பெற்றுக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார். தனியார் கொரியரில் மண்டை ஓடு அனுப்பப்பட்ட  சம்பவம் திருவையாறு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.