முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

’ஆளுநர் தேநீர் விருந்தை தவிர்ப்பது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல’ – சசிகலா பேட்டி

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப்படத்திற்கு வி.கே.சசிகலா மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று கூறினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஈரோடு தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபடுவீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, தற்போது தேதி 25 தான் ஆகிறது அதற்குள் என்ன அவரசம் என்று கூறினார்.

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவின் சார்பில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரும் தனித்தனி அணியாக பிரிந்து இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. அமமுக கட்சியின் சார்பிலும் தனித்து போட்டியிட போவதாக டிடிவி தினகரன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்து கட்சிகள் புறக்கணிப்பது குறித்து கூறிய சசிகலா, தமிழ்நாட்டின் முறை என்பது விருந்தோம்பலை கொண்டாடும் மக்கள். தமிழ்நாட்டு மக்கள் அப்படி இருக்கும்போது தேநீர் விருந்தை தவிர்ப்பது தமிழ்நாட்டிற்கு அழகு அல்ல என்று கூறினார்.

குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மாநிலங்கள் இழந்த உரிமையை பெறுவோம்: வைகோ

EZHILARASAN D

“ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2.64 லட்சம் கடன்” – நிதியமைச்சர் பிடிஆர்

Halley Karthik

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

G SaravanaKumar