கள்ளக்குறிச்சி அருகே அரசு பேருந்தும், காரும் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து அரசு பேருந்து ஒன்று சேலம் நோக்கி நேற்றிரவு சென்று கொண்டி ருந்தது. கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருகம் புறவழிச்சாலையில் வந்துகொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக கார் மீது பயங்கரமாக மோதியது. இதில், காரில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த தியாகதுருகம் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். அரசுப் பேருந்தில் பயணம் செய்து படுகாய மடைந்த பத்துக்கும் மேற்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 6 பேரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், காரில் இருந்தவர்கள் தாம்பரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் விடுமுறைக்காக ஊட்டி சென்றுவிட்டு தாம்பரத்திற்கு திரும்பிக் கொண்டிருந்ததும் தெரியவ ந்துள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.








