நிற்காமல் சென்ற காரில் ரூ.5 கோடி: விரட்டிப் பிடித்த போலீசார்

காரைக்குடி அருகே வாகன சோதனையில் 2 கார்களில் கொண்டு வரப்பட்ட 5 கோடி ரூபா யை போலீசார் பறிமுதல் செய்தனர். சிவகங்கை மாவட்டம் சிறுவயல் பகுதிகளில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந் தனர். அப்போது…

காரைக்குடி அருகே வாகன சோதனையில் 2 கார்களில் கொண்டு வரப்பட்ட 5 கோடி ரூபா யை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் சிறுவயல் பகுதிகளில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந் தனர். அப்போது வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டிவந்த இரண்டு கார்களை நிறுத்த முயன்றனர். ஆனால், கார்கள் நிற்காமல் வேகமாக சென்றதை அடுத்து, விரட்டிச் சென்ற போலீசார் குன்றக்குடியில் வைத்து மடக்கிப் பிடித்தனர்.

மேலும், காரில் சோதனையிட்டபோது 5 கோடி ரூபாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, பணம் மற்றும் கார்களை பறிமுதல் செய்த போலீசார், கார்களில் வந்த 5 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். கைப்பற்றப்பட்ட பணம், வருமான வரித்துறை யினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்தப் பணம் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்து போலீசாரும் வருமான வரித்துறையினரும் விசாரித்து வருகின்றனர். விசாரணைக்கு பிறகு அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.