தேமுதிக தலைவர் விஜய்காந்த் சிகிச்சைக்காக இன்று காலை 10.30 மணிக்கு விமானம்
மூலம் அமெரிக்கா செல்கிறார்.
தேமுதிக தலைவர் விஜய்காந்திற்கு கடந்த சில வருடங்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அவர் சென்னை திரும்பினார். அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்படுவதால் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக அவர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கு அவர் அமெரிக்கா செல்வதாக தகவல் வெளியானது. ஆனால், அதிகாலை விமானத்தில் அவர்
யணிக்க வில்லை.
இந்நிலையில், காலை 10.30 மணி அளவில் எமிரேட்ஸ் விமானம் மூலம், அவரது மனைவி பிரேமலதாவுடன் விஜயகாந்த் அமெரிக்கா செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவரும், காலை 8.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வருவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.







