சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகம் – தீபாவளிக்கு முன்பே வெளியாகும் பிரின்ஸ்?

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பிரின்ஸ் திரைப்படம் தீபாவளிக்கு முன்பே வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காதல், நட்பு, கல்லூரி, செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்த கலவை தான் சிவகார்த்திகேயன் நடித்து சமீபத்தில் வெளிவந்த டான்…

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பிரின்ஸ் திரைப்படம் தீபாவளிக்கு முன்பே வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காதல், நட்பு, கல்லூரி, செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்த கலவை தான் சிவகார்த்திகேயன் நடித்து சமீபத்தில் வெளிவந்த டான் திரைப்படம். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ரூ.100 கோடிக்கு மேல் வசூலை தட்டிச் சென்ற படமும் இது. இப்படத்தை பார்க்கும் போதே கண்களில் நீர் ததும்பும். படம் பார்த்த பிறகு கண்கலங்காமல் இருக்கும் நபர்கள் வெகு குறைவு. இப்படி ஒரு ஹிட் படத்திற்கு பிறகு, சிவகார்த்திகேயனின் அடுத்த படைப்பு எப்போது வெளியாகும் என எதிர்ப்பார்ப்பு அனைவருக்கும் எழுந்துள்ளது.

இந்நிலையில், அனுதீப் இயக்கத்தில் உருவாகிய பிரின்ஸ் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் நடித்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘ பிம்பிலிக்கி பிளாப்பி ‘ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ஜூன் 9-ம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. பின்னர் அடுத்தநாளே (ஜூன் 10-ம் தேதி) இப்படத்தின் 2nd லுக் போஸ்டர் வெளியானது. இந்நிலையில், பிரின்ஸ் திரைப்படம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த ஜூன் 21-ம் தேதி படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

ஆனால், ‘பிரின்ஸ்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகிவுள்ளது. இப்படத்தை அக்டோபர் 21-ம் தேதியே வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரின்ஸ் திரைப்படம் தீபாவளிக்கு முன்பே வெளியாவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

-சுஷ்மா சுரேஷ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.