தமிழகம் செய்திகள்

குளத்தை காணவில்லை என வட்டாட்சியர் அலுவலத்தில் புகார் அளித்த சமூக ஆர்வலர்-வடிவேலு பட பாணியில் சென்னையில் நடந்த ருசிகரம்!

சென்னை குன்றத்தூரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் வடிவேலு பட பாணியில் தங்கள் பகுதியில் இருந்த குளத்தை காணவில்லை என புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை உயர்நீதி மன்றம் நீர்நிலைகளில் படர்ந்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து அரசின் சார்பில் தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியானது நடைபெற்று வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட குன்றத்தூரில் அரசுக்கு சொந்தமான சர்வே எண் 562/Aல் அமைந்திருந்தது தொடுகுட்டை என்ற குளம். சுமார் 50 செண்ட் பரப்பளவில் இக்குளம் படர்ந்திருந்தது. பல ஆண்டுகளாக அப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், கால்நடைகளின் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் அசுர நகர்புற வளர்ச்சியின் காரணமாக காலப்போக்கில் சிலர் அக்குளத்தை ஆக்கிரமித்து வீடு,வணிக வளாகங்கள் உள்ளிடவற்றை கட்டி ஆக்கிரமித்துள்ளனர். இதனால் குளம் அப்பகுதியில் இருந்த தடயமே இல்லாமல் போய்விட்டது. இந்நிலையில் ஆக்கிரமிப்புகளால் அழிக்கப்பட்ட குளத்தை கண்டுபிடித்து தருமாறு சமூக ஆர்வலரும், பத்து ரூபாய் இயக்கத்தின் மாநில செயலாளருமான பாஸ்கர் என்பவர் குன்றத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

வடிவேலு ஒரு படத்தில் கிணற்றை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளிப்பார், அதுபோன்ற ஒரு சம்பவம் தற்போது சென்னையில் உண்மையாக நடந்துள்ளது
பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

—-வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இப்பொழுது கூட ஆணாதிக்கம் இருக்கிறது – நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

Web Editor

அருட்தந்தையர்கள், மாணவர்கள் இணைந்து கொண்டாடிய சமத்துவ பொங்கல்

Web Editor

பள்ளிக்கரணை சதுப்பு நில ஆக்கிரமிப்புகளை அரசு மீட்க வேண்டும்; அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

Jayasheeba