திருப்பத்தூர் அருகேயுள்ள சத்துரு சமஹாரக்கோட்டை ஸ்ரீபடைத்தலைவி அம்மன் கோயில் பக்தர்களின் பக்தி பரவசத்துடன் வெகு விமர்சையாக நடைபெற்றது.திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பால்குடம் எடுத்து வந்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள சத்துரு சம்ஹாரக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ஸ்ரீபடைத்தலைவி அம்மன் திருக்கோயில். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான வைகாசி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கமாகும்.அதன்படி இந்தாண்டு நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
மேலும் அம்மன் கோயில் எடுப்பு விழாவும்,ஸ்ரீகருக்குமடை அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழாவும் சிறப்புடன் நடந்தேறியது.திருவிழாவினை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் விநாயகர் கோயிலில் இருந்து பால்குடங்களை சுமந்து வந்து அம்மனுக்கு தங்களின் நேர்த்திக்கடனை காணிக்கையாக செலுத்தினர். மேலும் பக்தர்கள் சிலர் பக்தி பரவசத்துடன் 10அடி நீளமுடை அலகு குத்தியும்,காவடி எடுத்து வந்தும் அம்மனை வழிபட்டனர்.
பக்தர்களின் ஊர்வலத்தை காண வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் திரண்டிருந்தனர். இதனையடுத்து கோயில் நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.திருவிழாவினை காண சுற்றுவட்டாரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.
—வேந்தன்







