பிரமாண்டமாக நடைபெற்ற வருண் தேஜ் – லாவண்யா திரிபாதி நிச்சயதார்த்தம்!

தெலுங்கு நடிகர் வருண் தேஜ் – நடிகை லாவண்யா திரிபாதி இருவருக்கும் நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தெலுங்கில் 2014-ம் ஆண்டு ’முகுந்தா’ படத்தின் மூலம் அறிமுகமான வருண் தேஜ், சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின்…

தெலுங்கு நடிகர் வருண் தேஜ் – நடிகை லாவண்யா திரிபாதி இருவருக்கும் நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

தெலுங்கில் 2014-ம் ஆண்டு ’முகுந்தா’ படத்தின் மூலம் அறிமுகமான வருண் தேஜ், சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகன் ஆவார். இவர் தெலுங்கில் முன்னணி நடிகராக நடித்து வருகிறார். இவர் சாய் பல்லவியுடன் நடித்த ’பிடா’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் சசிகுமாருடன் ‘பிரம்மன்’, சந்தீப் கிஷனுடன் ‘மாயவன்’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் லாவண்யா திரிபாதி. தெலுங்கில் அதிகமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார்.

லாவண்யா திரிபாதியும், வருண் தேஜூம் ‘மிஸ்டர்’, ‘அந்தாரிக்சம்’ உள்ளிட்ட 4 படங்களில் இணைந்து நடித்திருந்தனர். இந்நிலையில் காதல் மலர்ந்ததாக செய்திகள் பரவியது. ஆனால் இதை லாவண்யா திரிபாதி மறுத்திருந்தார். தற்போது நிச்சயதார்த்திற்குப் பிறகு தங்கள் காதலை  இருவரும் வெளிப்படுத்தியுள்ளார்கள். இந்நிலையில், இவர்களது நிச்சயதார்த்தம் நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது.

இந்த நிச்சயதார்த்த விழாவில் வருணின் பெரியப்பாவும் நடிகருமான சிரஞ்சீவி குடும்பத்தினரும், அவரின் சித்தப்பாவும் நடிகருமான பவன் கல்யாண், சகோதரர் ராம் சரண் மற்றும் குடும்பத்தினரும், அல்லு அர்ஜுன் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். நிச்சயதார்த்தம் முடிந்த உடனேயே, தங்கள் காதலை அதிகாரபூர்வமாக அறிவித்து இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நிச்சயதார்த்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளனர்.

இந்நிலையில் நடிகையும் தயாரிப்பாளருமான வருண் தேஜின் தங்கை நிஹாரிகா கொனிடேலா, “இந்த நாளுக்காக காத்திருந்தேன். எங்களது குடும்பத்திற்கு வரவேற்கிறேன் அண்ணி” என பதிவிட்டுள்ளார். வருண் தேஜ் – லாவண்யா திரிபாதி ஜோடிக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர்களது திருமணம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.