சிவகங்கையில் 150 ஏக்கர் பப்பாளி மரங்கள் சாய்வு – விவசாயிகள் வேதனை!

சிவகங்கையில் பலத்த காற்று காரணமாக 150 ஏக்கர் பரப்பிளவில் இருந்த பப்பாளி மரங்கள் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், அருகே கூட்டுறவுபட்டி, சானிப்பட்டி, சிவல்பட்டி, மேட்டுப்பட்டி, அழகிச்சிப்பட்டி உள்ளிட்ட 7  கிராமங்களில்…

சிவகங்கையில் பலத்த காற்று காரணமாக 150 ஏக்கர் பரப்பிளவில் இருந்த பப்பாளி மரங்கள் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், அருகே கூட்டுறவுபட்டி, சானிப்பட்டி, சிவல்பட்டி, மேட்டுப்பட்டி, அழகிச்சிப்பட்டி உள்ளிட்ட 7  கிராமங்களில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அவர்களின் 150 ஏக்கர் அளவிலான நிலப்பரப்பில் பப்பாளி பயிரிட்டுள்ளனர்.

நாள் ஒன்றிற்கு இப்பகுதியிலிருந்து சுமார் 50 டன் அளவில் பப்பாளி அனுப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து நேற்றும், இன்றும் இப்பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை பொழிந்தது. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.  இதற்கு அரசு இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.